அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்

அர்த்தமுள்ள இந்துமதம் எனும் கண்ணதாசன் தலைப்பில் எனது பார்வையை செலுத்தி வருகிறேன் . இந்து மதம் அடிப்படையிலேயே வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அனைவருக்கும்  பொதுவான ஆதி மதம் என்பது என்னுடைய கருத்து . சரியான பாதையில் வழி நடத்தி செல்ல இருந்த இந்து சமயம் சாதிகள் , சரியாக விளங்கி கொள்ளாமை போன்றவற்றால் பிழையாக செல்கிறது .

எனது பழைய பதிவுகள் ஒரு தொடராக - மூன்றாம்  பகுதி    அதில் முதல் இரண்டு பகுதிகளுக்கு லிங்க் உள்ளது . தொடரை வெற்றியாக்கும் உங்களுக்கு நன்றிகள் ...
=========================================================================
இந்து சமயத்தின் ஒவ்வொரு செயல்ப்பாட்டுக்கும் காரணங்கள்  உண்டு . சிலவை மிகைப்படுத்தப்பட்டவை . காரணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் தோன்றிய சமயம் வெறும் வாய் வழியாகவே பரிமாறப்பட்டு வருகிறது . வாய் வழியாக வரும் போது திரிபுபடுத்தப்படுவது இயல்பு .

பாம்பை கொன்றால் பிழையா ? பாம்பு தெய்வமா ? பாம்புக்கு எதுக்கு முட்டையும் பாலும் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே ? பாம்பு கனவு ?என கிண்டல் அடிப்பதும் உண்டு .

முக்கியமாக பாம்பு கனவுகள் 
1 > ஒரு பாம்பு உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் என்ன என்பதை அறிவியல் அழகாக விளக்குகிறது . சாதாரண மனோதத்துவ நிலை தான் அது . உங்கள் குடும்பத்தில் அல்லது சுற்றத்தில் நீங்களா விரும்பிய ஒரு உயிர் இறக்க போகின்றதென்றால் அல்லது இறந்திருந்தால்  கட்டாயம் அந்த கனவு வரும் . ஒரு வித பயத்தின் இழப்பின் வெளிப்பாடு அது .

2 > சிலர் பாம்பு துரத்தி கடிப்பதும் ஆனால் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது போலவும் உணருவார்கள் . அப்படியானால் எங்கள் வாழ்க்கையில்  நாங்கள் எண்ணும் அளவுக்கு விடயம் ஒன்றும் சீரியஸாக இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் இந்த குறியீட்டில் தான் பிரதிப்பலிக்கப்பட்டன . காரணம் பாம்புக்கு மட்டுமே எல்லோரும் பயந்தது, பயப்படுவது .

முதலில் பாம்பை பற்றியும் கொஞ்சம் அறிவியல் தகவலை தந்து விட்டு மேலுள்ள காரணத்தை விளக்குகிறேன் . இதற்கும் இந்து சமயத்துக்கும் என்ன சம்மந்தம் என விளக்குகிறேன் .

ஒரு பாம்பு மனிதனையே விளங்கும் அளவுக்கு வாய் பகுதி பெரிதா என நினைக்கலாம் . ஆனால் அது 150 டிகிரி வரை வாயை நன்றாக விரிக்கும் . எங்களால் 90 டிகிரி கூட போக முடியாது .ஐந்து  தலை நாகம் இந்து சமய கதைகளில் வந்ததே உண்மையா ?  கூர்ப்பு கொள்கை அதில் செயல்ப்பட்டிருக்கலாம் . 130 மில்லியன் வருடங்களுக்கு முதல் தோன்றிய உயிரினம் பாம்பு . பினைப்புகளாலேயே உயிரினங்கள் யதார்த்தமாக தோன்றியது உண்மை . அதில் ஐந்து தலைகளுடன் தோன்றி இருக்கலாம். மற்றைய தலைகளின் தேவை இருந்திருக்காது . அதனால் காலப்போக்கில் அழிந்திருக்கலாம் .

பாம்பின் அசைவுகள் (நகர்வுகள் )


பாம்பிற்கு காதுகள் இல்லை .பிறகெப்படி மகுடி ஊதும் சத்தம் கேட்க்கும் ?
பாம்பிற்கு காதுகள் இல்லாவிட்டாலும் அவற்றால் ஒலி அதிர்வுகளை செவி மடுக்க முடியும் . நாம் ஏற்ப்படுத்தும் ஒலி அதிர்வுகள் அவற்றில் உடலில் பட்டு தோலினூடாக ஊடுகடத்தப்பட்டு மூளைக்கு ஒலியையும் எச்சரிக்கையையும் விடுக்கிறது . காதின் தொழிலை செய்யும் உள்ளுறுப்பு (சென்சார் ) உண்டு . மகுடியிலிருந்து வரும் ஒலி அதிர்வுகள் வித்தியாசமானவை. அவை பாம்பிற்கு உண்மையில் மயக்கத்தை ஏற்ப்படுத்தும் . எப்படி தான் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தார்களோ ?

சரி பாம்பிற்கு பால் ஊத்துவதன் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. அப்புறம் எதுக்கு புற்றுக்குள் ஊற்றினார்கள்  ?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம்  அடர்ந்த காடுகள்.  ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை . அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள் .ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை  கட்டுப்படுத்த முயன்றனர் .

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு தேடி வரும் . 

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது .

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் . அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது .

பாவம் அதால ருசியும் உணர முடியாது விட்டிருங்க. சிலர்  கட்டாயப்படுத்தி தான் பால் ஊற்றுகின்றனர். அவற்றிற்க்கு பால் பிடிப்பதில்லை . ஊர்வன வகை அவை . முளையூட்டிகள் பாலை குடிக்காது .


முக்கியமா இந்த ராமராஜன் படத்தில் எல்லாம் காட்டுவது போல பாம்பு பால் குடிக்காது . பக்தி படங்கள் எடுப்பவர்கள் காரணமும் சொன்னால் நன்றாக இருக்கும் . கிராபிக்ஸ் மட்டும்  காட்டாமல் .

நம்மவர்கள் செய்த பலவற்றிட்க்கும் காரணங்கள் உண்டு . அதை விளங்கினால் இந்துமதம் அர்த்தமுள்ளதாகும் .. தொடருவேன் .....

பிடித்திருந்தா மறக்காமல் ஓட்டு  போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்

Comments

chezhian said…
THANKS SIR PLE CONTINUE
S.Sudharshan said…
thank youchezhian
yes.. sure..
சுதர்சன் அருமையாக விளக்கியுள்ளீர்கள்...
விஞ்ஞானப்பூர்வ விளக்கம்.பல அறியாத தகவல்களைத்திரடித் தந்திருக்கிறீர்கள். நன்றி.

Popular posts from this blog

மணிரத்னத்தின் ஆண்கள்

சாக்லேட் : Kiss me, I can read your lips.

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு