Friday, February 26, 2010

விண்ணை தாண்டி வருவாயா - யதார்த்தமான காதல் காவியம்

எனது ஒரு வருட கால எதிர்பார்ப்பினைப்  பூர்த்தி செய்திருக்கிறார் கௌதம்மேனன் . என்றும் இளமை தீராத  ரசனையாளன் மற்றும் படைப்பாளி எனத்  தன்னை மீண்டும் நிலை நிறுத்தி இருக்கிறார்.



முதலில் இருந்தே கௌதம்மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர்பார்ப்பைத் தாண்டிய  அருமையான காட்சி அமைப்புகள்.  விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .



இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த விதம்  அருமை .



ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .



நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .



கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....